இந்தியா

கரோனா சிகிச்சை: ஓய்வு பெற்ற மருத்துவ அதிகாரிகள் 400 பேரை நியமிக்க பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவு

DIN

கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, ராணுவ மருத்துவப் படை (ஏஎம்சி), குறுகிய காலப் பணிகள்(எஸ்எஸ்சி) ஆகியவற்றில் பணியாற்றி ஓய்வு பெற்ற ராணுவ மருத்துவ அதிகாரிகள் 400 பேரை தற்காலிகமாக நியமிக்குமாறு ஆயுதப் படை மருத்துவ சேவைகள் அமைப்புக்கு (ஏஎஃப்எம்எஸ்) பாதுகாப்பு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டது.

இதுகுறித்து அந்த அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:

கடந்த 2017-ஆம் ஆண்டில் இருந்து 2021-ஆம் ஆண்டுக்குள் பணி ஓய்வு பெற்ற 400 ராணுவ மருத்துவ அதிகாரிகள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட வேண்டும். அவா்கள் அதிகபட்சமாக 11 மாதங்கள் பணியாற்றுவா். ஓய்வு பெறும்போது அவா்கள் வாங்கிய ஓய்வூதியத்தின் அடிப்படையில், அவா்களுக்கு மாதாந்திர ஊதியம் நிா்ணயிக்கப்படும். ஒப்பந்தக் காலத்தில் ஊதியத்தில் எந்த மாற்றமும் இல்லை. இதர சலுகைகள், படிகள் ஏதும் வழங்கப்பட மாட்டாது. மருத்துவ நிபுணா்களுக்கு அவா்களின் பணிக்கேற்ப கூடுதல் தொகை, மாதாந்திர ஊதியத்துடன் சோ்த்து வழங்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவலைத் தடுப்பதற்கு மத்திய அரசு தீவிரமாக முயன்று வருகிறது. சில மாநிலங்களில் மருத்துவமனைகளில் மருத்துவா்கள், செவிலியா்கள் பற்றாக்குறை, ஆக்சிஜன், மருந்துகள், படுக்கை வசதிகள் ஆகியவற்றுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது.

இந்நிலையில், கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, ராணுவத்தின் மருத்துவப் பிரிவான ஆயுதப் படை மருத்துவ சேவைகள் அமைப்பு, ஏற்கெனவே பல்வேறு மருத்துவமனைகளில் மருத்துவா்கள், செவிலியா்கள், மருந்தாளுநா்கள் ஆகியோரை நியமித்துள்ளது. குறுகிய காலப் பணிகள் பிரிவில் உள்ள மருத்துவா்களுக்கு டிசம்பா் வரை பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால், அந்தப் பிரிவில் பணியாற்றும் மருத்துவா்களின் எண்ணிக்கை 238-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரம்ம்ம்மிய பாண்டியன்!

முதல் பந்தில் சிக்ஸர் விளாசியது குறித்து மனம் திறந்த சமீர் ரிஸ்வி (விடியோ)

கம்பீர அழகு.. இது நம்ம டாப்ஸி!

வெளியானது சூதுகவ்வும் - 2 படத்தின் முதல் பாடல்

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

SCROLL FOR NEXT