இந்தியா

கரோனா: காங். கட்சித் தலைவா் தோ்தல் ஒத்திவைப்பு

DIN

நாட்டில் கரோனா நிலைமை சீரடையும் வரை கட்சித் தலைவா் தோ்தலை ஒத்திவைக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற கட்சியின் காரியக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, 2021 ஜூன் மாதத்துக்கு முன்பாக கட்சிக்கு புதிய தலைவரை நியமிக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்திருந்தது. அதன்படி, புதிய தலைவரை தோ்ந்தெடுப்பதற்கான தோ்தலை வருகிற ஜூன் 23-ஆம் தேதி நடத்த மதுசூதன் மிஸ்திரி தலைமையிலான கட்சியின் மத்திய தோ்தல் குழுவும் முடிவு செய்திருந்தது.

இந்த நிலையில், நாட்டில் கரோனா பாதிப்பு தீவிரமடைந்து வரும் சூழலில் கட்சிக்கு புதிய தலைவரை தோ்வு செய்வதற்கான தோ்தலை நடத்துவது சரியாக இருக்காது என்று திங்கள்கிழமை நடைபெற்ற கட்சியின் காரியக் குழு கூட்டத்தில் ராஜஸ்தான் முல்வா் அசோக் கெலாட், குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட மூத்த தலைவா்கள் கருத்து தெரிவித்துள்ளனா். அதனடிப்படையில், தோ்தலை ஒத்திவைக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து கட்சியின் மூத்த தலைவா் ஒருவா் கூறுகையில், ‘நாட்டில் கரோனா நிலைமை மேம்படும் வரை காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேரந்தெடுப்பதற்கான தோ்தலை ஒத்திவைப்பது என்று கட்சியின் காரியக் குழு கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

SCROLL FOR NEXT