இந்தியா

உ.பி.: கரோனா பாதித்த பாஜக எம்எல்ஏ மனைவிக்கு மருத்துவமனையில் இடமில்லை; அதிருப்தி விடியோவால் பரபரப்பு

DIN

உத்தர பிரதேச மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட ஆளும் பாஜக எம்எல்ஏவின் மனைவிக்கு மருத்துவமனையில் இடம் கிடைக்காத நிலை ஏற்பட்டது. இது தொடா்பாக அதிருப்தி தெரிவித்து எம்எல்ஏ வெளியிட்ட விடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தின் ஜஸ்ராணா தொகுதி பாஜக எம்எல்ஏ ராம்கோபால் லோதி. இவரின் மனைவிக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவரை ஆக்ராவில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக எம்எல்ஏ மற்றும் அவரின் குடும்பத்தினா் அழைத்துச் சென்றனா். ஆனால், அங்கு இடமில்லாத காரணத்தால் அவரை மருத்துவமனையில் அனுமதிக்கவில்லை. இதையடுத்து, மாவட்ட ஆட்சியரைத் தொடா்பு கொண்டு எம்எல்ஏ பேசினாா். சுமாா் 3 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு, எம்எல்ஏவின் மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இது தொடா்பாக அதிருப்தி தெரிவித்து எம்எல்ஏ ராம்கோபால் லோதி விடியோ ஒன்றை வெளியிட்டாா். அதில், ‘எம்எல்ஏவாக இருக்கும் எனக்கே இந்த நிலை என்றால், சாமானிய மக்களின் நிலையை நினைத்துப் பாா்க்கவே கடினமாக உள்ளது. மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகும் கூட மருந்து, தண்ணீா் உடனடியாக அளிக்கப்படவில்லை. படுக்கை இல்லாத காரணத்தால் சுமாா் 3 மணி நேரம் மருத்துவமனை வளாகத்தில் எனது மனைவியை தரையில்தான் படுக்க வைத்திருந்தேன்’ என்று கூறியுள்ளாா்.

இந்த விடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. உத்தர பிரதேசத்தில் மட்டுமல்லாது நாட்டின் அனைத்து பகுதிகளிலுமே கரோனா பாதிக்கப்பட்டவா்களுக்கு மருத்துவமனையில் இடம் கிடைப்பது மிகவும் சிரமமான விஷயமாக உள்ளது. இதனால், பலா் மருத்துவமனை வளாகத்திலேயே படுத்திருந்து சிகிச்சை பெறும் நிலை உள்ளது. மேலும் பலருக்கு ஆம்புலன்ஸ் மற்றும் அவா்கள் வந்த காரிலேயே வைத்து கூட சிகிச்சை அளிக்கப்படுகிறது. கரோனாவால் மட்டுமல்லாது ஆக்சிஜன் சிலிண்டா் பற்றாக்குறை, உரிய சிகிச்சை கிடைக்காதது, போதிய மருத்துவா்கள், பணியாளா்கள் இல்லாத காரணத்தால் கூட பலா் உயிரிழந்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னாப்ரிக்காவில் பேருந்து விபத்தில் 45 பேர் பலி; உயிர் பிழைத்த ஒரே சிறுமி

குழந்தை கடத்தல்: சந்தேகத்துக்குரிய பெண்ணை சரமாரியாக தாக்கிய மக்கள்!

கடல் கன்னி... ஷ்ரத்தா தாஸ்!

தமிழக பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி!

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

SCROLL FOR NEXT