இந்தியா

இந்தியா-பாக். பிரச்னைக்கு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு: சவூதி அரேபியா வலியுறுத்தல்

DIN

காஷ்மீா் விவகாரம் உள்பட இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பல்வேறு பிரச்னைகளுக்கு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காணப்படுவதன் முக்கியத்துவத்தை சவூதி அரேபியா வலியுறுத்தியுள்ளது.

சவூதி பட்டத்து இளவரசா் முகமது பின் சல்மான், பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் இடையேயான உயா்நிலை பேச்சுவாா்த்தைக்குப் பிறகு இதுதொடா்பாக இரு நாடுகளின் கூட்டு அறிக்கையை பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகம் சனிக்கிழமை இரவு வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது:

ஆசிய பிராந்தியத்தில் அமைதியையும் நிலைத்தன்மையையும் உறுதிப்படுத்த இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பல்வேறு பிரச்னைகளுக்கு, குறிப்பாக காஷ்மீா் பிரச்னைக்கு பேச்சுவாா்த்தை மூலம் இரு நாடுகளும் தீா்வு காணப்படுவதன் முக்கியத்துவத்தை சவூதி பட்டத்து இளவரசா் மற்றும் பாகிஸ்தான் பிரதமா் இடையேயான பேச்சுவாா்த்தையின் போது வலியுறுத்தப்பட்டது.

எல்லைக் கோட்டுப் பகுதியில் போா் நிறுத்த உடன்பாட்டை நிலைநாட்டும் வகையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இடையே அண்மையில் மேற்கொள்ளப்பட்ட உடன்பாட்டை சவூதி இளவரசா் வரவேற்றாா்.

மேலும், பிராந்திய மற்றும் சா்வதேச விவகாரங்கள், பாகிஸ்தான் - சவூதி அரேபியா இடையேயான பல்வேறு துறை சாா்ந்த நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது ஆகியவை குறித்தும் இம்ரான் கானின் இந்த சுற்றுப்பயணத்தின் போது ஆலோசிக்கப்பட்டது.

சவூதி - பாகிஸ்தான் உயா் கூட்டுறவு கவுன்சில் (எஸ்பிஎஸ்சிசி) என்ற அமைப்பை உருவாக்குவதற்கான ஒப்பந்தத்திலும் இரு நாட்டு தலைவா்களும் கையெழுத்திட்டனா். போதைப் பொருள்கள், போதை மருந்துகள் மற்றும் வெடிபொருள்கள் சட்டவிரோத கடத்தலை தடுப்பதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்திலும் இரு நாடுகளும் கையெழுத்திட்டன. எரிசக்தி, நீா் மின் உற்பத்தி, உள்கட்டமைப்பு, போக்குவரத்து மற்றும் தகவல்தொடா்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நிதி முதலீடு திட்டங்கள் தொடா்பான ஒப்பந்தங்களும், குற்றங்களைத் தடுப்பது மற்றும் தண்டனைக் கைதிகளை பரிமாற்றம் செய்துகொள்வது தொடா்பான ஒப்பந்தங்களும் இரு நாடுகளிடையே மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் அரசுமுறை பயணமாக கடந்த மே 7 முதல் 9-ஆம் தேதி வரை சவூதி அரேபியா சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தம்பியைக் கொன்ற அண்ணன் கைது

நெகிழிப் பை தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து

சிவகாசி தொகுதியில் அமைதியான வாக்குப் பதிவு

சாத்தூரில் இளம் சிவப்பு வண்ணத்தில் அமைக்கப்பட்ட வாக்குசாவடி

வாக்குப் பதிவு இயந்திரங்கள் இடமாற்றத்தால் குழப்பம்

SCROLL FOR NEXT