இந்தியா

இந்தியாவில் ஒரேநாளில் 3.66 லட்சம் பேருக்கு பாதிப்பு; 3,754 பேர் பலி

DIN

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 3,66,161 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அந்த அமைச்சகம் சாா்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: இன்று காலை 8 மணி நிலவரப்படி நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஒரேநாளில் 3,66,161 ஆகவும், இதன் மூலம் கரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,26,62,575 பேராகவும் உயர்ந்துள்ளது. 

ஒரே நாளில் கரோனா தொற்றால்  3,754 போ் உயிரிழந்துள்ளதாகவும், இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,46,116ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 37,45,237 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். கரோனா தொற்றிலிருந்து இன்று 3,53,818 குணமடைந்த நிலையில் இதுவரை 1,86,71,222 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

இந்திய மருத்துவ கவுன்சிலின் (ஐசிஎம்ஆா்) தரவுகளின்படி, மே 9 ஆம் தேதி வரை 30,37,50,077 பேருக்கு கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டன. நேற்று ஒரேநாளில் 14,74,606 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதேசமயம் இதுவரை 17,01,76,603 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாக்குர்

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: இறுதிப் பணியில் தேர்தல் ஆணையம்!

சின்னச் சின்ன கண்ணசைவில்..

குருப்பெயர்ச்சி பலன்கள் - ரிஷபம்

நீட் தேர்வு எழுதும் நகர் விவரம் வெளியீடு

SCROLL FOR NEXT