இந்தியா

தில்லியில் கரோனா பரிசோதனை ஆய்வகத்தில் தீ விபத்து

ANI

தென் தில்லியின் கிரேட்டர் கைலாசத்தில் உள்ள ஒரு தனியார் ஆய்வகத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி காவல்துறையினர் தெரிவித்தனர். 

கிரேட்டர் கைலாசத்தில், எஸ் பிளாக்கில் உள்ள பாசின் ஆய்வகத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் எந்தவிதமான  உயிரிழப்பும் ஏற்படவில்லை. 

இது தென் தில்லியின் மிகப்பெரிய ஆய்வகமாகும், நாளொன்றுக்கு 1000 ஆர்டி-பி.சி.ஆர் கரோனா சோதனைகள் மற்றும் பிற சோதனைகள் இந்த ஆய்வகத்தில்  மேற்கொள்ளப்படுகிறது. 

சம்பவ இடத்துக்கு கிரெட்டர் கைலாஷ் காவல் நிலைய காவலர்கள் விரைந்து வந்து ஆய்வகத்தில் உள்ள ஊழியர்களை வெளியேற்றினர். 

மேலும், ஏழு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு வந்து, தீயை அணைத்தனர். இதுதொடர்பாக காவல்துறையினர் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT