இந்தியா

கரோனாவுக்கு 22 பொறியாளர்கள் பலி, 500 பேர் பாதிப்பு: பிகார் சங்கம்

IANS

கரோனா வைரஸின் இரண்டாவது அலை முன்னணி வீரர்கள் மட்டுமல்லாது,  பல முக்கிய அரசு அதிகாரிகளும் பலியாகி வருகின்றனர். 

இந்நிலையில், பிகார் பொறியியல் சேவை சங்கத்தில்(பிஇஎஸ்எ) பல்வேறு துறைகளில் உள்ள 22 பொறியாளர்கள் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 500-க்கும் மேற்பட்டவர்கள் மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதுதொடர்பாக பிகார் பொறியியல் சேவை சங்கத்தில் பொதுச் செயலாளர் டாக்டர் சுனில் குமார் சவுத்ரி கூறுகையில், 

பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வீட்டுத்தனிமையில் மற்றும்  மருத்துவமனைகளில் தங்கள் உயிருக்குப் போராடி வருகின்றனர். 

அறிக்கையின்படி, சாலை கட்டுமானத் துறையில் மூன்று பொறியாளர்கள், நீர்வளத் துறையைச் சேர்ந்த நான்கு பேர், மைக்ரோ நீர்வளத் துறையைச்  சேர்ந்த ஒருவர், கட்டட கட்டுமானத் துறையைச் சேர்ந்த இருவர், பொதுச்  சுகாதார பொறியியல் துறையைச் சேர்ந்த ஒருவர், ஊரக வளர்ச்சித்  துறையைச் சேர்ந்த ஒருவர், மற்ற துறைகளைச் சேர்ந்த மேலும் 10  பொறியியலாளர்கள் கரோனாவின் இரண்டாவது அலைகளில் தனது  வாழ்க்கையை இழந்துள்ளனர். 

பிகாரில் பொறியாளர்களின் இறப்பு தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. இருந்தாலும், பல துறைகள் பொறியியலாளர்களை பணியில் இருக்கும்படி  கட்டாயப்படுத்துகின்றன. பொது முடக்கத்தால் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன, ஆனால் தற்போது பல்வேறு திட்டங்களின் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. 

இதனால், பொறியாளர்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். பிகாரில் நிதீஷ் குமார் அரசின் மீது மிகுந்த அதிருப்தியில் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT