இந்தியா

அஸ்ஸாம் முதல்வராகிறார் ஹிமந்த விஸ்வ சர்மா

DIN


அஸ்ஸாமில் பாஜக சட்டப்பேரவைக் குழுத் தலைவராக கட்சியின் மூத்த தலைவர் ஹிமந்த விஸ்வ சர்மா இன்று (ஞாயிற்றுக்கிழமை) தேர்வு செய்யப்பட்டார்.

அஸ்ஸாம் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக தொடர்ந்து 2-வது முறையாக அங்கு ஆட்சியமைக்கிறது. இருந்தபோதிலும், மாநிலத்தின் முதல்வரைத் தேர்வு செய்வதில் முன்னாள் முதல்வர் சர்வானந்த சோனோவால் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் ஹிமந்த விஸ்வ சர்மா ஆகியோரிடையே கடும் போட்டி நிலவி வந்தது.

இதுதொடர்பாக ஆலோசனை நடத்த தில்லி வருமாறு இருவருக்கும் பாஜக தலைமை அழைப்பு விடுத்தது. பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா இல்லத்தில் சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக 5 கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷ் ஆகியோரும் பங்கேற்றனர்.

பேச்சுவார்த்தைக்குத் தனி காரில் வந்த இருவரும் பேச்சுவார்த்தை முடிந்த பிறகு ஒரே காரில் இணைந்து சென்றனர்.

இந்த நிலையில் பாஜக சட்டப்பேரவைக் குழுக் கூட்டம் பேரவை வளாகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக ஹிமந்த விஸ்வ சர்மா பெயரை முன்னாள் முதல்வர் சர்வானந்த சோனோவால் முன்மொழிந்தார். அதற்கு எம்.எல்.ஏ.-க்கள் ஆதரவு தெரிவித்தனர்.

இந்தக் கூட்டத்தில் கட்சித் தலைமையின் கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்ட மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், பாஜக தேசியப் பொதுச்செயலர் அருண் சிங், பாஜக பொதுச்செயலர் (அமைப்பு) பி.எல். சந்தோஷ் மற்றும் கட்சியின் துணைத் தலைவர் பைஜயந்த் ஜே பாண்டா ஆகியோரும் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழனியில் தீத் தொண்டு வாரம்

வாக்குகளுடன் ஒப்புகைச் சீட்டுகளை ஒப்பீடு கோரிய வழக்கு: தீா்ப்பு ஒத்திவைப்பு

வாக்குச்சாவடிக்கு செல்ல இலவச வாகன வசதி

துபையில் கனமழை : விமானங்கள் ரத்து - சென்னையில் பயணிகள் வாக்குவாதம்

திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் 16.07 லட்சம் போ் வாக்களிக்க ஏற்பாடு

SCROLL FOR NEXT