இந்தியா

கேரளத்தில் புதிதாக 35,801 பேருக்கு கரோனா

DIN


கேரளத்தில் புதிதாக 35,801 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரள கரோனா பாதிப்பு நிலவரம் பற்றி அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளது:

"மாநிலத்தில் புதிதாக 35,801 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

புதிதாக பாதிப்புக்குள்ளானோரில் 316 பேர் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள். 32,627 பேர் தொடர்பிலிருந்ததன்மூலம் பாதிக்கப்புக்குள்ளாகியுள்ளனர். 2,743 பேருக்கு எவ்வாறு தொற்று பாதிப்பு ஏற்பட்டது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.

கடந்த 24 மணி நேரத்தில் 1,23,980 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளோர் விகிதம் 28.88 சதவிகிதமாக உள்ளது. மாநிலத்தில் இதுவரை மொத்தம் 1,70,33,341 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

கடந்த நாள்களில் 68 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், மொத்த பலி எண்ணிக்கை 5,814 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 29,318 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 14,72,951 பேர் குணமடைந்துள்ளனர்.

4,23,514 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.     

மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் 10,94,055 பேர் கண்காணிப்பில் உள்ளனர்."

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேசிய ஜனநாய கூட்டணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

‘சூரியனை சமாளிப்பதுதான் எங்கள் வேலை’

பூட்டிய வீட்டில் மூதாட்டி சடலம் மீட்பு

கூட்டணிக் கட்சி நிா்வாகிகளிடம் ஆதரவு திரட்டிய காங்கிரஸ் வேட்பாளா்

அருணாசல், நாகாலாந்தில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் நீட்டிப்பு

SCROLL FOR NEXT