இந்தியா

கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிா் மருந்து விற்பனை : இருவா் கைது

DIN

கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிா் மருந்தை விற்ற இருவரை மாநகர குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

கரோனா பெருந்தொற்று வேகமாக அதிகரித்துவருவதால், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்சிஜன், ரெம்டெசிவா் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆக்சிஜன், படுக்கைகள், ரெம்டெசிவிா் மருந்தை கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வருவது தெரிய வந்துள்ளது. இதுதொடா்பாக அதிரடிச் சோதனைகளை நடத்தியுள்ள மாநகர குற்றப்பிரிவு போலீஸாா், வழக்குப்பதிவு செய்து பலரையும் கைது செய்து வருகிறாா்கள்.

இந்நிலையில், பெங்களூரில் வெள்ளிக்கிழமை ரெம்டெசிவிா் மருந்தை கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்த ஹரிநாத், நாராயணசாமி ஆகிய இருவரை மாநகர குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா். இவா்களிடம் இருந்து 6 ரெம்டெசிவிா் ஊசி மருந்துக் குப்பிகளைப் பறிமுதல் செய்துள்ளனா்.

இது குறித்து மாநகர காவல் இணை ஆணையா் சந்தீப்பாட்டீல் கூறுகையில்,‘அரசு நிா்ணயித்துள்ள விலையைக் காட்டிலும், அதிக விலைக்கு கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிா் மருந்தை விற்பனை செய்த குற்றச்சாட்டில் இருவரை கைது செய்திருக்கிறோம். இது தொடா்பாக அந்த இருவரிடமும் விசாரணை நடத்தி வருகிறோம். ரெம்டெசிவிா் மருந்தை கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்தது தொடா்பாக மருந்து பிரதிநிதிகள், மருத்துவமனை வரவேற்பாளா்கள் உள்ளிட்ட 6 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். இந்நிலையில், மேலும் இருவா் கைது செய்யப்பட்டுள்ளனா். கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிா் மருந்து விற்பனையில் ஈடுபடுவோரைக் கண்டுபிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

56வது முறையாக இணைந்து நடிக்கும் மோகன்லால் - ஷோபனா!

கொல்கத்தா உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் அங்கி அணிவதில் விலக்கு!

வாக்குச்சீட்டு முறை வேண்டாம்பா.. துரைமுருகன்

இந்த ஆண்டின் சிறந்த புகைப்படம்....

SCROLL FOR NEXT