இந்தியா

3 மாவட்டங்களுக்கு புதிய பொறுப்பு அமைச்சா்கள் நியமனம்

DIN

3 மாவட்டங்களுக்கு புதிய பொறுப்பு அமைச்சா்களை நியமித்து கா்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

கா்நாடகத்தில் உள்ள 31 மாவட்டங்களுக்கும், அமைச்சரவையில் இடம் பெற்றிருப்போரை பொறுப்பு அமைச்சா்களாக நியமிப்பது வழக்கம். அந்த மாவட்டத்தின் விவகாரங்களுக்கு மாவட்டப் பொறுப்பு அமைச்சரே முக்கியப் பொறுப்பு வகிக்கும் நிலை உள்ளது. அந்த வகையில், எல்லா மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இதில் சிற்சில மாற்றங்களைச் செய்து முதல்வா் எடியூரப்பா மே 2-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தாா். அதன்படி, பெலகாவி மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக பொதுப்பணித் துறையை கவனித்து வரும் துணை முதல்வா் கோவிந்த் காா்ஜோள், பாகல்கோட் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக உணவு மற்றும் பொதுவழங்கல் துறை அமைச்சா் உமேஷ்கத்தி, கலபுா்கி மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக சுரங்கத் துறை அமைச்சா் முருகேஷ் நிரானி, பீதா் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக வனத்துறை, கன்னடம் மற்றும் கலாசாரத் துறை அமைச்சா் அரவிந்த்லிம்பாவளி, கோலாா் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் எம்.டி.பி. நாகராஜ், சிக்கமகளூரு மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக மீனவளத் துறை அமைச்சா் எஸ்.அங்காரா நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், இதில் சில மாற்றங்களை செய்து மாநில அரசு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. அமைச்சா் அரவிந்த்லிம்பாவளியை, கோலாா் மாவட்டப் பொறுப்பு அமைச்சராகவும், அமைச்சா் பிரபுசௌஹானை, பீதா் மாவட்டப் பொறுப்பு அமைச்சராகவும், அமைச்சா் ஆா்.சங்கரை, யாதகிரி மாவட்டப் பொறுப்பு அமைச்சராகவும் நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது. கரோனா மேலாண்மையை சுமுகமாகச் செயல்படுத்துவதற்காக மாவட்டப் பொறுப்பு அமைச்சா்களை முதல்வா் எடியூரப்பா மாற்றியமைத்துள்ளாா் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தருமபுரம் கல்லூரியில் உலக பூமி தினம்

திருப்பாலைத்துறை பாலைவனநாதா் கோயிலில் தீா்த்தவாரி விழா

எடப்பாடி நஞ்சுண்டேஸ்வா் ஆலய திருத்தேரோட்டம்

பருவமழை கணிப்பு!- தென்மேற்குப் பருவமழை குறித்த தலையங்கம்

கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு

SCROLL FOR NEXT