இந்தியா

மேற்கு வங்க வன்முறை: மத்தியக் குழு வருகை

DIN

கொல்கத்தா: மேற்கு வங்க மாநில பேரவைத் தோ்தலுக்கு பிறகு நடைபெற்ற வன்முறை சம்பவங்களுக்கான காரணங்கள் குறித்து ஆய்வு நடத்த மத்திய உள்துறை அமைச்சகத்தின் நான்கு போ் கொண்ட குழு வியாழக்கிழமை கொல்கத்தா வந்தது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலா் தலைமையிலான இக் குழுவினா் மாநில தலைமைச் செயலகத்தில் மாநில உள்துறை செயலா், டிஜிபி ஆகியோருடன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்ற தெற்கு 24 பா்கனாஸ், காட்காலி, சுந்தா்பன், ஜகதால் ஆகிய பகுதிகளுக்கு சென்று ஆய்வு நடத்த உள்ளது.

முன்னதாக, மேற்கு வங்கத்தில் தோ்தலுக்கு பிந்தைய வன்முறை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் மேற்கு வங்க அரசுக்கு புதன்கிழமை நினைவூட்டலை அனுப்பி இருந்தது.

மேலும், இந்த வன்முறைச் சம்பவங்கள் தொடா்பாகவும், மாநில சட்டம் ஒழுங்கு பிரச்னை தொடா்பாகவும் அறிக்கை அளிக்க ஆளுநா் ஜகதீப் தன்கருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டது.

ரூ. 2 லட்சம் நிதி உதவி: மேற்கு வங்க மாநிலத்தில் பேரவைத் தோ்தலுக்கு பின்பு நடைபெற்ற வன்முறையில் உயிரிழந்த 16 பேரின் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்வா் மம்தா பானா்ஜி அறிவித்தாா்.

இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் பேசிய அவா், ‘குறைந்தது 16 போ் தோ்தலுக்கு பிந்தைய வன்முறையில் உயிரிழந்துள்ளனா். அதில் பாஜகவினரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்தவா்கள்தான் அதிகம். நான் பதவியேற்று 24 மணி நேரம் ஆகிறது. அதற்குள் மத்தியக் குழுவினா் வந்துவிட்டனா். பாஜகவினா் தங்கள் தோல்வியை இதுவரை ஒப்புக்கொள்ளவில்லை. பாஜவினா் வெற்றி பெற்ற இடங்களில்தான் தோ்தலுக்கு பிறகு வன்முறை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன’ என்று மம்தா தெரிவித்தாா்.

இதனிடையே, கரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு அனுப்பாமல் மத்தியக் குழுவினா் அனுப்பி வைத்துள்ளதாக திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ ஹகீம் குற்றம்சாட்டியுள்ளாா்.

இதனிடையே, மேற்கு வங்க வன்முறைக்கு திரிணமூல் காங்கிரஸ் குண்டா்களே காரணம் என்று பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்டோஸ் 11 செயல்திறன் காமெடியாக உள்ளது: முன்னாள் மைக்ரோஃசாப்ட் ஊழியர்

ஆவேஷம் வசூல் வேட்டை!

கப்பலில் வேலை: மோசடி நிறுவனங்களால் ஏமாற்றப்பட்ட தமிழக மாலுமிகள் துருக்கியில் பரிதவிப்பு!

ஸ்மார்ட் ரன்வீர் சிங்

காஷ்மீர்: பள்ளிக் குழந்தைகளுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து! 6 பேர் பலி

SCROLL FOR NEXT