இந்தியா

அச்சமூட்ட அல்ல; எச்சரிக்கையே: 3-ஆம் அலை குழந்தைகளை கடுமையாக தாக்கும் அபாயம்

DIN


பெங்களூரு: நாட்டில் தற்போது கரோனா பேரிடரின் இரண்டாம் அலை கொடுந்தீவிரமடைந்திருக்கும் நிலையில், மூன்றாம் அலை குழந்தைகளை கடுமையாக தாக்கும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

தற்போது குழந்தைகளுக்கு கரோனா பெருந்தொற்று பாதிப்பது கடுமையாக அதிகரித்து வருவதை முன்னிட்டு, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனை தரப்பில் இந்த எச்சரிக்கைத் தகவல்  வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு கரோனா பேரிடரைப் போல அல்லாமல் உருமாறிய கரோனா தொற்றின் இரண்டாம் அலையின்போது குழந்தைகளுக்கு கரோனா உறுதியாவது அதிகரித்திருப்பதும், குழந்தைகளுக்கும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிப்பதும் அதிகரிப்பதும் கண்கூடாகத் தெரிகிறது.

இந்த நிலையில், நாட்டில் கரோனா மூன்றாம் அலை நேரிட்டால், குழந்தைகளை மிகவும் எச்சரிக்கையுடன் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

0 - 16 வயதுடைய குழந்தைகளின் பெற்றோர், இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புதிதாகப் பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்படு அதிக வாய்ப்பிருப்பதாகவும், தாய்ப்பால் கொடுப்பதை அனைத்துத் தாய்மார்களும் உறுதி செய்யவும், குழந்தைகளுக்கு போடும் எந்தத் தடுப்பூசியையும் கரோனா அச்சத்தால் விட்டுவிட வேண்டாம் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

காய்ச்சல், வாயுக் கோளாறு, சளி போன்றவை குழந்தைகளுக்கு ஏற்படும் பொதுவான அறிகுறிகள். ஒரு வேளை பெரியவர்களுக்கு கரோனா பாதித்துவிட்டால், அவர்கள் கரோனா கட்டுப்பாடுகளை முழுமையாகப் பின்பற்றாவிட்டால், அவர்கள் மூலம் குழந்தைகளுக்கும் பரவி விடும் அபாயம் இருப்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். அது மட்டுமல்ல, சில குழந்தைகள் கரோனா பாதித்தாலும் எந்த அறிகுறியும் இல்லாமல் இருப்பார்கள் அவர்கள் மூலம் வீட்டிலிருக்கும் முதியவர்களுக்கும் தொற்று பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, 10 வயதுடைய குழந்தைகளுக்கு கரோனா தொற்று ஏற்படாமல் பாதுகாப்பது மிகவும் அவசியம் என்று மருத்துவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

தியாகராஜ சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி

பாஜக, காங்கிரஸ் பணப் பட்டுவாடா: புதுவை தொகுதியில் தோ்தலை ரத்து செய்ய அதிமுக வலியுறுத்தல்

ஸ்ரீராமநவமி வாா்ஷிக மஹோற்சவம்

நாகை மாவட்ட கிரிக்கெட் அணிக்கு வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT