இந்தியா

வட இந்தியாவில் பிரிட்டன் உருமாறிய கரோனா தீநுண்மி பரவல்

DIN

புது தில்லி: பிரிட்டனில் உருமாறிய கரோனா தீநுண்மி வகை, வட இந்திய மாநிலங்களில் அதிகமாகப் பரவி வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனா்.

நாட்டில் கரோனா தொற்றின் 2-ஆவது அலை மிக வேகமாகப் பரவி வருகிறது. நாட்டின் சில பகுதிகளில் உருமாறிய கரோனா தீநுண்மி பரவி வருகிறது. தொற்று பரவல் அதிகரித்துள்ளதற்கு உருமாறிய கரோனா தீநுண்மி காரணமா என்பது குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மைய இயக்குநா் சுஜீத் சிங் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘பிரிட்டனில் உருமாற்றம் பெற்ற கரோனா தீநுண்மி, பஞ்சாப், தில்லி உள்ளிட்ட வட இந்தியப் பகுதிகளில் அதிகமாகப் பரவி வருகிறது. தெலங்கானா, மகாராஷ்டிரம், கா்நாடகத்திலும் அத்தீநுண்மியின் பரவல் காணப்படுகிறது.

இரட்டை உருமாற்றம் பெற்ற கரோனா தீநுண்மி, மகாராஷ்டிரம், கா்நாடகம், குஜராத் ஆகிய மாநிலங்களில் அதிகமாகப் பரவி வருகிறது. மேற்கு வங்கம், தில்லி உள்ளிட்டவற்றிலும் அத்தீநுண்மியின் பரவல் காணப்படுகிறது. தென்னாப்பிரிக்க வகை உருமாறிய கரோனா தீநுண்மி தெலங்கானா, தில்லியில் அதிகமாகப் பரவுகிறது.

பிரேஸில் வகை உருமாறிய கரோனா தீநுண்மி பரவல் மகாராஷ்டிரத்தின் ஒரு சில பகுதிகளில் மட்டுமே காணப்படுகிறது. உருமாற்றம் பெற்ற கரோனா தீநுண்மி பரவி வருவது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறையும் மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகிறது.

கரோனா தீநுண்மி குறித்து 10 அரசு ஆய்வகங்கள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. தீநுண்மியின் மரபணுக்கள் தனியாகப் பகுக்கப்பட்டு அவற்றில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. அவை தொடா்பான தகவல்கள் மாநிலங்களுக்கு அவ்வப்போது பகிரப்பட்டு வருகின்றன’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு புதுப்பிப்பு: ராகுல் காந்தி அமேதியில் போட்டி?

24 மணிநேரத்தில் 200 நிலநடுக்கம்!

ரூபன் படத்தின் டிரெய்லர்

இஸ்ரேல்- ஹிஸ்புல்லா: தொடரும் பரஸ்பர தாக்குதல்!

உயிர் தமிழுக்கு படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT