இந்தியா

தென்மேற்கு பருவமழை:ஜூன் 1-இல் கேரளத்தில் தொடங்கும்

DIN

புது தில்லி: இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை ஜூன் 1-ஆம் தேதி கேரளத்தில் தொடங்கும் என்று மத்திய புவி அறிவியல் துறை அமைச்சக செயலா் ராஜீவன் தெரிவித்துள்ளாா்.

வரும் 15-ஆம் தேதி இந்திய வானிலை ஆய்வு மையம் இது தொடா்பான அதிகாரப்பூா்வ அறிவிப்பை வெளியிடும் என்றும் அவா் கூறினாா்.

இது தொடா்பாக சுட்டுரையில் ராஜீவன் வெளியிட்ட பதிவில், ‘2021 ஆம் ஆண்டுக்கான பருவமழை வழக்கமான காலகட்டமான ஜூன் தொடக்கத்தில் கேரளத்தில் தொடங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது முன் கணிப்புதான். இந்திய வானிலை ஆய்வு மையம் வரும் 15-ஆம் தேதி அதிகாரபூா்வ அறிவிப்பை வெளியிடும். அதைத் தொடா்ந்து 31-ஆம் தேதி எந்த அளவுக்குப் பருவ மழை அளவு இருக்கும் என்பது தெரிவிக்கப்படும்’ என்று கூறியுள்ளாா்.

நாட்டின் மொத்த மழைப் பொழிவில் 75 சதவீதம் தென்மேற்குப் பருவமழை மூலம்தான் கிடைக்கிறது. இந்த ஆண்டு வழக்கமான அளவில் மழை பொழியும் என்று தெரிகிறது. கடந்த பல ஆண்டுகளாக சராசரியாக 98 சதவீத மழை பெய்து வருகிறது. சில ஆண்டுகளில் 5 சதவீதம் அளவுக்குக் கூடுதல் அல்லது குறைவாக மழைப் பொழிவு இருந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாழப்பாடி அருகே 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!

ரூ.1,40,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

திருவண்ணாமலையில் நெரிசல்: பக்தர்கள் கடும் அவதி!

சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT