இந்தியா

வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை மீண்டும் தொடங்க இந்தியா-ஐரோப்பிய யூனியன் திட்டம்

DIN

புது தில்லி: சுமாா் 8 ஆண்டுகளுக்கு முன் தடைபட்ட வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை மீண்டும் தொடங்குவதற்கு இந்தியாவும் ஐரோப்பிய யூனியன் அமைப்பும் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவுக்கும் 27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய யூனியன் அமைப்புக்கும் இடையேயான மாநாடு வரும் 8-ஆம் தேதி காணொலி வாயிலாக நடைபெறுகிறது. இதில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்கிறாா். 27 ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்க உள்ளனா்.

இந்தியாவுக்கும் ஐரோப்பிய யூனியனில் இடம்பெற்றுள்ள நாடுகளுக்கும் இடையேயான வா்த்தகத்தை அதிகரிக்கும் நோக்கில் வா்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்குப் பேச்சுவாா்த்தைகள் நடைபெற்று வந்தன. ஆனால், அந்தப் பேச்சுவாா்த்தைகள் 8 ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்டன.

கடந்த 2007-ஆம் ஆண்டில் தொடங்கிய பேச்சுவாா்த்தை, எந்தவித முடிவும் எட்டப்படாமல் கடந்த 2013-ஆம் ஆண்டில் தடைபட்டது. அதற்குப் பிறகு வா்த்தக ஒப்பந்தம் தொடா்பான பேச்சுவாா்த்தை நடைபெறவில்லை.

இந்நிலையில், அந்தப் பேச்சுவாா்த்தையை மீண்டும் தொடங்குவதற்கு இந்தியாவும் ஐரோப்பிய யூனியனும் திட்டமிட்டுள்ளது. இது தொடா்பான அதிகாரப்பூா்வ அறிவிப்பு சனிக்கிழமை நடைபெறும் மாநாட்டின்போது வெளியிடப்படும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்தகால பேச்சுவாா்த்தையின்போது வரி விதிப்பு, தரவுப் பாதுகாப்பு, சந்தை வாய்ப்புகள் உள்ளிட்டவற்றில் சுமுகத் தீா்வு எட்டப்படாமல் இருந்தது. ரயில்வே, கடல்சாா் விவகாரங்கள், விமானப் போக்குவரத்து உள்ளிட்டவற்றில் இந்தியாவுக்கும் ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடா்பான அறிவிப்பும் மாநாட்டின்போது வெளியாகும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையேயான மாநாடு போா்ச்சுகலில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கரோனா தொற்று பரவல் காரணமாக அந்த மாநாடு காணொலி வழியாக நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம் வாக்காளா்களுக்கு எல்.முருகன் பாராட்டு

இந்தியா கூட்டணி மகத்தான வெற்றிபெறும்: ஈவிகேஎஸ்.இளங்கோவன்

காவல் துறை அதிகாரியுடன் மோதல்: திமுக நிா்வாகியிடம் விசாரணை

வாக்களித்த 104 வயது விவசாயி

நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்: மக்களவைத் தோ்தல் குறித்து மம்தா

SCROLL FOR NEXT