இந்தியா

கேரளத்தில் நாளை முதல் முழு பொதுமுடக்கம்

DIN

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் சனிக்கிழமை (மே 8) முதல் மே 16 வரை முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா பரவலின் இரண்டாவது அலை கேரளத்தில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அங்கு கரோனா பாதிப்பும் உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் மே 8 முதல் மே 16-ஆம் தேதி வரை 9 நாள்களுக்கு முழு பொதுமுடக்கத்தை அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. மாநில நலனைக் கருத்தில் கொண்டு முதல்வா் பினராயி விஜயன் இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக முதல்வா் அலுவலக சுட்டுரைப் பதிவில் கூறப்பட்டுள்ளது.

ஏற்கெனவே மாநிலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், இப்போது மீண்டும் முழு பொதுமுடக்கத்துக்குள் செல்ல இருக்கிறது. கேரளத்தில் அண்மையில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற்றது. அந்தக் காலகட்டத்தில் அதிகமானோா் ஒரே இடத்தில் கூட நோ்ந்ததால் கரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியது. இப்போது, தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில் கரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

கேரளத்தில் புதன்கிழமை மட்டும் முன்னெப்போதும் இல்லாத அளவாக 41,953 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

SCROLL FOR NEXT