இந்தியா

பாட்னாவில் கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை: 4 பேர் கைது

ANI

பாட்னாவில் கள்ளச் சந்தையில் ரெம்டெசிவிர் மருந்தை விற்க முயன்ற 4 பேரை பாகல்பூர் காவல்துறையினர் கைது செய்தனர். 

இதுதொடர்பாக பாகல்பூரின் ஏஎஸ்பி புரான் ஜா கூறுகையில், 

குற்றம் சாட்டப்பட்டவர்கள் பல்ஸ் மருத்துவமனையின் மேலாளர் ராகுல் ராஜ் மற்றும் பிந்து தாக்கூர் ஆவார். விசாரணையின்போது, ​​மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு கரோனா பாதிக்கப்பட்ட நோயாளியின் பெயரில் மருந்து வாங்க விண்ணப்பித்திருந்தனர். ஆனால் அந்த நோயாளி ஏற்கெனவே இறந்துவிட்டார் என்பது தெரிய வந்தது. 

மற்றொரு சம்பவத்தில், ஒரு மருத்துவர் உள்பட இருவரை பாட்னா காவல்துறையினர் இன்று கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் டாக்டர் அஸ்பாக் அகமது மற்றும் அவரது மைத்துனர் மொஹமட் அல்தாஃப் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பாட்னாவின் டிஎஸ்பி பாஸ்கர் ரஞ்சன், காந்தி மைதான காவல் நிலையத்தின் கீழ் எஸ்பி வர்மா சாலையில் அமைந்துள்ள ரெயின்போ மருத்துவமனையில் சோதனை நடத்தி அவர்களை கைது செய்தார். அவர்களிடமிருந்து 2 ரெம்டெசிவிர் மருந்துகளை போலீசார் மீட்டனர்.

விசாரணையின் போது, ​​குற்றம் சாட்டப்பட்டவர்கள் ரெம்டெசிவிர் மருந்தை ரூ.3400க்கு வாங்கி ரூ.50,000க்கு விற்றது தெரியவந்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

'மோடி உத்தரவாதம்' ஒரு தடயமும் இல்லாமல் மறைந்துவிட்டது: ப.சிதம்பரம் தாக்கு

சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு!

நம்பிக்கை நாயகன்!

SCROLL FOR NEXT