இந்தியா

ஒடிசாவில் 10 ஆயிரத்தைத் தாண்டிய ஒருநாள் கரோனா பாதிப்பு

6th May 2021 12:30 PM

ADVERTISEMENT

ஒடிசாவில் ஒருநாள் கரோனா பாதிப்பு 10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 

ஒடிசா மாநிலத்தில் நேற்று ஒருநாள் பாதிப்பு 9,889 என இருந்த நிலையில் இன்று 10 ஆயிரத்தைத் தாண்டி பதிவாகியுள்ளது. 

இங்கு கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,521 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 81,585 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மேலும் 16 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6,176 பேர் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். 

ADVERTISEMENT

இன்று பாதித்தோரில் 5,945 பேர் ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டவர்கள். மேலும், 4,576 பேர் தொடர்புகளின் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மாநிலத்தில் இதுவரை 1,03,67,418 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Tags : ஒடிசா
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT