இந்தியா

பி.எம்.கேர்ஸ் நிதி எங்கே? மம்தா கேள்வி

6th May 2021 04:42 PM

ADVERTISEMENT

கரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் பிஎம் கேர்ஸ் நிதி எங்கே சென்றது என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்தவண்ணம் உள்ளது. பல்வேறு மாநில முதல்வர்களும் போதிய மருத்துவ வசதி வேண்டி மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர். 

இந்நிலையில் வியாழக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த மேற்குவங்க முதல்வரும், திரிணமூல் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி கரோனா தொற்று பரவல் தொடர்பாக மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார். 

அப்போது பேசிய அவர், “இலவச கரோனா தடுப்பூசி தொடர்பாக நான் எழுப்பிய கோரிக்கைக்கு இதுவரை மத்திய அரசு பதிலளிக்கவில்லை என தெரிவித்தார்.

ADVERTISEMENT

தொடர்ந்து , “ ரூ.20,000 கோடி செலவழித்து புதிய நாடாளுமன்றம் மற்றும் சிலைகளை உருவாக்கும் போது ஏன் தடுப்பூசிகளுக்கு ரூ.30,000 கோடியை மத்திய அரசு ஒதுக்கவில்லை” எனக் குற்றம்சாட்டினார். 

மேலும் பி.எம்.கேர்ஸ் நிதி எங்கே சென்றது? மத்திய அரசு இளைஞர்களின் உயிர்களை பணயம் வைக்கிறது? என மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT