இந்தியா

ஆக்ஸிஜன் சிலிண்டர் எனக் கூறி தீயணைப்பானை விற்ற மூவர் கைது

6th May 2021 11:55 AM

ADVERTISEMENT

தில்லியில் வண்ணம் பூசப்பட்ட தீயணைப்பானை ஆக்ஸிஜன் சிலிண்டர் என்று கூறி முறைகேடாக விற்பனை செய்த மூன்று பேரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

தில்லியின் அலிபூர் பகுதியில் தனியார் தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். 

அதில், தீயணைப்பானிற்கு ஆக்ஸிஜன் சிலிண்டர் போன்று வண்ணமடித்து அதனை ஆக்ஸிஜன் தேவைப்படுவோருக்கு விற்பனை செய்வதாக புகாரளிக்கப்பட்டது.

இதனையடுத்து அப்பகுதியில் சோதனையிட்ட காவல் துறையினர் தீயணைப்பானுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர் போன்று கருப்பு வண்ணமடித்துக்கொண்டிருந்த மூவரைக் கைது செய்தனர்.

ADVERTISEMENT

Tags : coronavirus oxygen
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT