இந்தியா

தெலங்கானாவில் மேலும் 6,026 பேருக்கு கரோனா: 52 பேர் பலி 

6th May 2021 11:38 AM

ADVERTISEMENT

 

தெலங்கானாவில் தினசரி பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து ஒரே நாளில் 52 பேர் தொற்று பாதித்து பலியாகியுள்ளனர். 

இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, 

கடந்த 24 மணி நேரத்தில் 6,026 பேர் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து மொத்த பாதிப்பு 4.75 லட்சமாக உயர்ந்துள்ளது. 

ADVERTISEMENT

மேலும் தொற்று காரணமாக 52 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 2,579 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து 77,127 பேர் தற்போது மருத்துவச் சிகிச்சையில் உள்ளனர். 

கரோனா பாதித்து 6,551 பேர் நோயிலிருந்து மீண்டுள்ள நிலையில் மொத்தம் 3,96,042 பேர் இதுவரை குணமடைந்தனர். 

மே 5-ம் தேதி வரை 1.33 கோடி பரிசோதனைகள் மேற்கொண்டுள்ளனர். இறப்பு விகிதம் 0.54 ஆகவும், மீட்பு விகிதம் 83.24 ஆகவும் உள்ளது. 
 

Tags : coronavirus தெலங்கானா
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT