இந்தியா

கரோனா நோயாளிகளுக்கு நாள்தோறும் ரூ.5,000: ஹரியாணா அரசு

6th May 2021 01:24 PM

ADVERTISEMENT

தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக நாள்தோறும் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என்று ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டர் அறிவித்துள்ளார். 

வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள மக்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என்றும், அவர்களது மருத்துவ செலவுக்காக இந்தத் தொகை வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

ADVERTISEMENT

இது தொடர்பாக அவர் பேசியதாவது, கரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு உதவும் வகையில் நாள்தோறும் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். அதிகபட்சமாக 7 நாள்களுக்கு என ஒரு நபருக்கு ரூ.35 ஆயிரம் வழங்கப்படும்.

இதேபோன்று தனியார் மருத்துவமனைகளும் அவர்களுக்கு ரூ. 1,000 ஒதுக்க வேண்டும். ஒரு நாளைக்கு ரூ. 1000 வீதம் 7 நாள்களுக்கு ரூ. 7,000 வழங்க வேண்டும். இதன் மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு அரசு சார்பில் ரூ.42 ஆயிரம் வழங்கப்படும் என்று கூறினார்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT