இந்தியா

ராஷ்ட்ரிய லோக் தள கட்சித் தலைவர் அஜித் சிங் காலமானார்

6th May 2021 09:52 AM

ADVERTISEMENT

ராஷ்ட்ரிய லோக் தள கட்சித் தலைவரும், மத்திய முன்னாள் அமைச்சருமான அஜித் சிங் கரோனா பாதிப்பால் காலமானார். 

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அஜித் சிங்(82) இன்று காலை காலமானார். 

அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவர் அஜித் சிங். இவர் விவசாயிகளின் பிரதிநிதியாக கருதப்பட்டவர். 

ADVERTISEMENT

7 முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட அவர், மன்மோகன் சிங் அமைச்சரவையில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார். மேலும் வாஜ்பேயி, நரசிம்மராவ் அமைச்சரவையிலும் இருந்தார். 

முன்னாள் பிரதமர் சௌத்ரி சரண் சிங்கின் மகன் அஜித் சிங் ஆவார். 

அதேபோல அஜித் சிங்கின் மகன் ஜெயந்த்சிங் சௌத்ரியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். 

Tags : கரோனா
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT