இந்தியா

முன்னாள் மத்திய அமைச்சர் அஜித் சிங் மறைவிற்கு குடியரசுத் தலைவர் இரங்கல்

6th May 2021 06:17 PM

ADVERTISEMENT

கரோனா பாதிப்பால் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அஜித் சிங் மறைவிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கரோனா பாதிப்பால் ராஷ்ட்ரிய லோக் தள கட்சித் தலைவரும், மத்திய முன்னாள் அமைச்சருமான அஜித் சிங் தன்னுடைய 93 வயதில் வியாழக்கிழமை காலமானார்.  அஜித் சிங் மறைவுக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில் "ராஷ்ட்ரிய லோக் தள கட்சித் தலைவரும், மத்திய முன்னாள் அமைச்சருமான அஜித் சிங் மறைவிற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் எப்போதும் விவசாயிகளின் நலனுக்காக குரல் எழுப்பினார். அவரது குடும்பத்தினருக்கும் நலம் விரும்பிகளுக்கும் எனது இரங்கல் தனது இரங்கலில் குடியரசுத் தலைவர் குறிப்பிட்டுள்ளாா்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவரும், விவசாயிகளின் பிரதிநிதியாக செயல்பட்டவருமான அஜித் சிங். 7 முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் ஆவார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT