இந்தியா

முன்னாள் மத்திய அமைச்சர் அஜித் சிங் காலமானார்: மோடி இரங்கல்

6th May 2021 10:09 AM

ADVERTISEMENT

 

கரோனா பாதிப்பால் ராஷ்ட்ரிய லோக் தள கட்சித் தலைவரும், மத்திய முன்னாள் அமைச்சருமான அஜித் சிங் தன்னுடைய 93 வயதில் வியாழக்கிழமை காலமானார்.  அஜித் சிங் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

"தன்னை விவசாயிகளின் நலன்களுக்காக அர்ப்பணித்து பணியாற்றியவர். மத்திய அரசில் பல்வேறு துறைகளில் பல பொறுப்புகளை வகித்து திறமையாக செயல்பட்டவரை நாடு இழந்துள்ளது" என மோடி தனது இரங்கலில் குறிப்பிட்டுள்ளாா்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவரும், விவசாயிகளின் பிரதிநிதியாக செயல்பட்டவருமான அஜித் சிங். 7 முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட அவர், மன்மோகன் சிங் அமைச்சரவையில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சராகவும், வாஜ்பேயி, நரசிம்மராவ் அமைச்சரவையிலும் இடம் பெற்றிருந்தவர்.  முன்னாள் பிரதமர் சௌத்ரி சரண் சிங்கின் மகன் அஜித் சிங் ஆவார். அதேபோல அஜித் சிங்கின் மகன் ஜெயந்த்சிங் சௌத்ரியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். 
 

ADVERTISEMENT

Tags : PM Modi condoles Chaudhary Ajit Singh passing away
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT