இந்தியா

உத்தரகண்டில் இளைஞர்களுக்கு 1 கோடி கரோனா தடுப்பூசி

6th May 2021 12:20 PM

ADVERTISEMENT


உத்தரகண்டில் 18 முதல் 44 வயதிற்குட்பட்டோருக்கு 1 கோடி கரோனா தடுப்பூசி ஒதுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் அருணேந்திர சிங் செளஹான் தெரிவித்துள்ளார். 

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா 2-ம் அலை வேகமாகப் பரவி வருகிறது. கரோனாவிலிருந்து காத்துக்கொள்ளும் வகையில் அனைத்து வயதினருக்கும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் 18 முதல் 44 வயதுடையவர்களுக்கு ஒரு கோடி கரோனா தடுப்பூசி ஒதுக்கப்பட்டுள்ளதாக உத்தரகண்ட் மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் அறிவித்துள்ளார். 

இதனை இளைஞர்களுக்கு மட்டுமே முழுமையாக பயன்படுத்த மாநில சுகாதாரத் துறைக்கு வலியுறுத்தியுள்ளார். 

ADVERTISEMENT

உத்தரகண்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,783 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

Tags : coronavirus Uttarakhand
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT