இந்தியா

மேற்கு வங்கத்தில் எம்எல்ஏக்கள் பதவியேற்பு

6th May 2021 05:10 PM

ADVERTISEMENT

மேற்கு வங்கத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் இன்று பதவியேற்றுக்கொண்டனர். 

மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தோ்தல் 8 கட்டங்களாக நடத்தப்பட்டது. இதில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி 213 இடங்களிலும், பாஜக 77 இடங்களிலும் வெற்றி பெற்றது. ஆனால், நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானா்ஜி தோல்வியடைந்தாா். இதற்கிடையே, மம்தா பானா்ஜியை திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள், கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக ஒருமனதாக தோ்ந்தெடுத்தனா். 

அதனடிப்படையில், ஆட்சியமைக்க உரிமை கோரியதன்பேரில், மாநில ஆளுநா் அவருக்கு அழைப்பு விடுத்தாா். கரோனா தொற்றுப் பரவல் அபாயம் காரணமாக மாநில ஆளுநா் மாளிகையில் எளிமையான முறையில் பதவியேற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் மம்தா பானா்ஜி மட்டும் முதல்வராக பதவியேற்றுக்கொண்டாா். புதிய அமைச்சா்கள் யாரும் பதவியேற்கவில்லை. 

இந்த நிலையில் புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்பு நிகழ்ச்சி இன்று மேற்கு வங்க சட்டப்பேரவையில் நடைபெற்றது. தற்காலிக சபாநாயகர் சுப்ரதா முகர்ஜி புதிய எம்எல்ஏக்களுக்கு பதவிப் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ஆனால் இன்று பாஜகவைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் யாரும் பதவியேற்கவில்லை. பதவியேற்பு நிகழ்ச்சியில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியும் பங்கேற்றார். 

ADVERTISEMENT

இதனிடையே எம்எல்ஏக்கள் பதவியேற்பு நிகழ்ச்சி சனிக்கிழமை வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags : WestBengal
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT