இந்தியா

மகாராஷ்டிரத்தில் ஒரேநாளில் 62,194 பேருக்கு கரோனா; 853 பேர் பலி

6th May 2021 10:04 PM

ADVERTISEMENT

மகாராஷ்டிரத்தில் ஒரேநாளில் 62,194 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அம்மாநில அரசு வெளியிட்டுள்ள தகவலில், மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 62,194 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 49,42,736ஆக உயர்ந்துள்ளது. 

அதேசமயம் கரோனாவுக்கு இன்று மேலும் 853 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 73,515ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று ஒரேநாளில் 63,842 பேர் குணமடைந்தனர். இதுவரை 42,27,940 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

தற்போதைய நிலவரப்படி 6,39,075 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். 38,26,089 பேர் வீடுகளிலும், 29,406 பேர் நிறுவனங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT