இந்தியா

மகாராஷ்டிரத்தில் தீவிர சிகிச்சையில் 82 ஆயிரம் கரோனா நோயாளிகள்

6th May 2021 06:35 PM

ADVERTISEMENT

 

மகாராஷ்டிரத்தில் தற்போது சுமார் 82,098 கரோனா நோயாளிகள் பல்வேறு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சையில் உள்ளதாக வியாழக்கிழமை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, 

மகாராஷ்டிரத்தில் கரோனா தொற்று கட்டுக்கடங்காமல் வேகமாகப் பரவி வருகின்றது. தினசரி பாதிப்பும் பலியும் உயர்ந்து வருகின்றது.

ADVERTISEMENT

அதன்படி, மாநிலம் முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 82,098 பேர் சிகிச்சையில் உள்ள நிலையில், அதிகபட்சம் 25,265 பேர் தீவிர சிகிச்சை பிரிவிலும், ஆக்சிஜனில் 17,077 பேரும், வென்டிலேட்டரில் 8,288 பேரும் உள்ளனர். 

மேலும் 56,733 கரோனா நோயாளிகள் ஐ.சி.யு.களுக்கு வெளியே ஆக்சிஜன் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களில் பலருக்கு அறிகுறி இல்லாமல் தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. .

மே 3-ம் தேதி வரை புணே, நாக்பூர், மும்பை, நாசிக் மற்றும் தாணே ஆகிய 5 மாநிலத்தில் உள்ள 36 மாவட்டங்களில் மட்டும் மொத்தம் 6,56,870 சிகிச்சையில் உள்ளனர். மாநிலத்தில் தற்போதைய இறப்பு விகிதம் 1.49 சதவீதமாக உள்ளது.

அதே நேரத்தில் மீட்பு விகிதம் 85.32 ஆக உள்ளது. மொத்த பாதிப்பு  48,80,542 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 72,662 ஆக உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT