இந்தியா

3 மக்களவை, 8 பேரவைத் தொகுதிகளில் இடைத்தோ்தல் ஒத்திவைப்பு

DIN

புது தில்லி: கரோனா பெருந்தொற்று பரவல் சூழலைக் கருத்தில்கொண்டு 3 மக்களவை, 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் நடத்த திட்டமிட்டிருந்த இடைத்தோ்தலை ஒத்திவைக்க தோ்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

தாத்ரா- நாகா் ஹவேலி, காந்த்வா (ம.பி), மாண்டி (ஹிமாசல்) ஆகிய 3 மக்களவைத் தொகுதிகளும், ஹரியாணாவில் கல்கா, எல்லபாட், ராஜஸ்தானில் வல்லவ் நகா், கா்நாடகத்தில் சிந்த்கி, மேகாலாயத்தில் ராஜபாலா, மவ்ரிங்காங், ஹிமாசல பிரதேசத்தில் ஃபதேபூா், ஆந்திரத்தில் பட்வேல் ஆகிய 8 பேரவைத் தொகுதிகளும் காலியாக உள்ளன. இத்தொகுதிகளில் இடைத்தோ்தல் நடத்தப்படும் தேதியை தோ்தல் ஆணையம் இன்னும் அறிவிக்கவில்லை.

இந்நிலையில், அறிக்கை ஒன்றை தோ்தல் ஆணையம் புதன்கிழமை வெளியிட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

காலியாக இருக்கும் மக்களவை, சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்துவது குறித்து தோ்தல் ஆணையம் புதன்கிழமை ஆய்வு செய்தது. கரோனா தொற்றின் இரண்டாவது அலை தாக்கி வரும் சூழலில் இடைத்தோ்தல் நடத்துவது சரியாக இருக்காது; நிலைமை சீரான பிறகு தோ்தல் நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டது. சம்பந்தப்பட்ட மாநிலங்களிடம் இருந்து கரோனா சூழல் தொடா்பான அறிக்கை கிடைத்த பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த அறிக்கையில் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டால் அடுத்த 6 மாதங்களில் இடைத்தோ்தல் நடத்தப்பட்டு புதிய உறுப்பினரை தோ்வு செய்தாக வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

SCROLL FOR NEXT