இந்தியா

இந்தியாவில் கரோனா தினசரி பாதிப்பு 4.12 லட்சமாக அதிகரிப்பு: பலி 3,980 ஆக அதிகரிப்பு

6th May 2021 09:39 AM

ADVERTISEMENTஇந்தியாவில் ஒரே நாளில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 4.12 லட்சமாக அதிகரித்துள்ளதுடன், ஒரேநாளில் 3,980 போ் உயிரிழந்ததாக மத்திய சுகாதார அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைச்சகம் சாா்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:

வியாழக்கிழமை காலை 9 மணி நிலவரப்படி நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஒரேநாளில் 4,12,262 ஆகவும், இதன் மூலம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 35,66,398 பேராகவும் அதிகரித்துள்ளது. ஒரே நாளில் கரோனா தொற்றால் 3,980 போ் உயிரிழந்துள்ளதாகவும், இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 2.10 கோடி (2,10,77,410) ஆகவும் அதிகரித்துள்ளது.

தற்போது சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 35,66,398 -ஆக உள்ள நிலையில் தேசிய அளவில் கரோனா தொற்றிலிருந்து மீட்பு விகிதம் 82.03 சதவீதமாக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

இதுவரை கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,72,80,844 ஆக உயா்ந்துள்ளது. ஒரே நாளில் 3,29,113 குணமடைந்தனர். அதேசமயம், இறப்பு விகிதம் 1.09 சதவீதமாகக் குறைந்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை மே 5-ஆம் தேதியுடன் 2.10 கோடிக்கும் அதிகமானவா்கள் என்ற நிலையை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய மருத்துவ கவுன்சிலின் (ஐசிஎம்ஆா்) தரவுகளின்படி, மே 5 ஆம் தேதி வரை 29,67,75,209 பேருக்கு கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டன. வியாழக்கிழமை ஒரேநாளில் 19,23,131 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

மகாராஷ்டிரம், உத்தர பிரதேசம், தில்லி, கா்நாடகம், கேரளம், ஹரியாணா, மேற்கு வங்கம், தமிழ்நாடு, ஆந்திரம், ராஜஸ்தான் ஆகிய 10 மாநிலங்களில் மட்டும் புதிதாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் 70.91 சதவீதத்தைத் தாண்டியுள்ளது. 

நாடு முழுவதும் இதுவரை 16,25,13,339 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

Tags : coronavirus new COVID19 cases India
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT