இந்தியா

கரோனா தடுப்பு நடவடிக்கையில் பிரதமரின் அதிகாரிகள் தோல்வி: சுப்ரமணியன் சுவாமி குற்றச்சாட்டு

6th May 2021 01:33 PM

ADVERTISEMENT

கரோனா தடுப்பு நடவடிக்‍கையில் பிரதமர் நரேந்திர மோடியின் சைக்‍கோ அதிகாரிகள் தோல்வி அடைந்துவிட்டதாக பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்ரமணியன் சுவாமி குற்றம்சாட்டியுள்ளார். 

கரோனா இரண்டாவது அலை இந்தியாவையே உலுக்கி வருகிறது. இந்த அலை எப்போது ஓயும் என்றும் தெரியவில்லை. 

இந்நிலையில், சுப்ரமணியன் சுவாமி வெளியிட்டுள்ள சுட்டுரை பதிவில், கரோனா மூன்றாவது அலை குழந்தைகளை கடுமையாக பாதிக்கும் என்று இரண்டு நாள்களுக்கு முன்பு தான் எச்சரிக்கை விடுத்தேன். தற்போது நிதி ஆயோக் உறுப்பினர், மூன்றாவது அலை பேராபத்துகள் குறித்து எச்சரிக்கை விடுத்து உறுதிபடுத்தியுள்ளதாக கூறியுள்ளார். 

மேலும், கரோனா தடுப்பு நடவடிக்‍கையில் பிரதமர் நரேந்திர மோடியின் சைக்‍கோ அதிகாரிகள் தோல்வி அடைந்துவிட்டனர். தற்போது கரோனாவை கட்டுப்படுத்த நமக்‍கு சைக்‍கோ அதிகாரிகள் தேவையில்லை, தீவிர கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்புக் குழுவே தேவை என்றும் சுப்ரமணியன் சுவாமி குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT