இந்தியா

கேரளத்தில் மே 8 முதல் 16 வரை முழு ஊரடங்கு

6th May 2021 11:24 AM

ADVERTISEMENT


கேரளத்தில் மே 8-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பித்து அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். 

கேரளத்தில் கரோனா 2-ம் அலை பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையொட்டி, அதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த உத்தரவை அவர் பிறப்பித்துள்ளார். 

கேரளத்தில் இது குறித்து பேசிய முதல்வர் பினராயி விஜயன், கரோனா 2-வது அலை மாநிலத்தில் அதிகமாகப் பரவி வருகிறது.

தொற்று அதிகரித்து வருவதால் மே 8-ம் தேதி காலை 6 மணி முதல் 16-ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுகிறது.  

ADVERTISEMENT

மக்கள் இதற்கு ஒத்துழைப்பு அளித்து கரோனா பரவலுக்கு எதிரான போரில் அரசுக்கு உதவ வேண்டும்  என்று கேட்டுக்கொண்டார். 

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மகாராஷ்டிரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களிலும் கரோனா 2-வது அலை அதிகரித்து வருகிறது. அதனால் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அம்மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.  
 

Tags : kerala coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT