இந்தியா

கரோனா எதிரொலி: கைதிகளுக்கு பரோல் வழங்க கேரள அரசு முடிவு 

6th May 2021 01:08 PM

ADVERTISEMENT

 

கேரள மாநிலத்தில் அதிகரித்துவரும் கரோனா தொற்று காரணமாக சிறையில் உள்ள கைதிகளுக்கு பரோல் வழங்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. 

கடந்த சில மாதங்களாக கேரள மாநிலத்தில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு விதித்து வருகின்றது. 

 

ADVERTISEMENT

இதையடுத்து, சிறைச்சாலையில் உள்ள தகுதியுடைய கைதிகளுக்கு அடுத்த இரண்டு வாரங்களுக்கு பரோல் வழங்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. 

இந்த ஆண்டில் பரோலுக்கு தகுதியான கைதிகள் மற்றும் பரோலில் செல்ல தயாராக உள்ளவர்களுக்கு விடுப்பு வழங்கப்படலாம் சிறை அதிகாரிகளுடன் 
ஆலோசித்து அரசு முடிவு செய்துள்ளது. 

கேரளத்தில் மூன்று மத்தியச் சிறைகள் உள்பட மொத்தம் 54 சிறைகளில் 6,000 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags : kerala Prisoners
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT