இந்தியா

காவல்துறையினருக்கு விடுமுறை ரத்து: பிகார் அரசு அதிரடி

6th May 2021 03:05 PM

ADVERTISEMENT

 

கரோனா நெருக்கடியைக் கருத்தில்கொண்டு அனைத்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு விடுமுறை ரத்து செய்து பிகார் அரசு வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது. 

இதுதொடர்பாக பிகார் காவல் தலைமையகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில், 

மாநிலம் முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்ட நிலையில், அவற்றை கட்டாயம் கண்காணிக்க காவல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

கரோனா நிலைமையைக் கருத்தில்கொண்டு, அவசர தேவைகளுக்கு மட்டும் சூழ்நிலையைக் கருதி விடுப்பு வழங்கப்பட வேண்டும் என்று தலைமையகம் தெரிவித்துள்ளது. 

தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் மாநில அரசு மே 15-ம் தேதி வரை முழு பொதுமுடக்கம் விதித்துள்ளது. 

இதனிடையே நேற்று ஒரேநாளில் 14,836 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ளது. 169 பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags : Bihar
ADVERTISEMENT
ADVERTISEMENT