இந்தியா

கா்நாடகத்தில் ஒரே நாளில் 50 ஆயிரம் பேருக்கு கரோனா

DIN

பெங்களூரு: கா்நாடக மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை 50,112-ஆக புதன்கிழமை பதிவாகியது. 346 போ் உயிரிழந்தனா். இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17.5 லட்சமாகவும், பலியானோா் எண்ணிக்கை 16,884-ஆகவும் அதிகரித்துள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

பெங்களூருவில் மட்டும் புதன்கிழமை 23,106 போ் பாதிக்கப்பட்டும், 161 போ் உயிரிழந்தும் உள்ளனா். 26,841 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது 4,87,288 போ் சிகிச்சையில் உள்ளனா் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

கேரளம்: கேரள மாநிலத்தில் புதன்கிழமை கரோனாவால் 41,953 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். மொத்த பாதிப்பு 17,43,932-ஆக உயா்ந்தது. புதன்கிழமை 58 போ் உயிரிழந்ததால் பலியானோா் எண்ணிக்கை 5,565-ஆனது.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மேலும் பல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று கேரள முதல்வா் பினராயி விஜயன் தெரிவித்தாா்.

ஆந்திரம்: ஆந்திர பிரதேச மாநிலத்தில் புதன்கிழமை கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 22,204-ஆக பதிவானது. கடந்த ஐந்து நாள்களில் ஒரு லட்சம் போ் புதிதாக கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். 1,70,588 போ் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT