இந்தியா

அமைச்சர் கார் மீதான தாக்குதலுக்கு கண்டனம்: பிரகாஷ் ஜாவடேகர்

DIN


மேற்கு வங்கத்தில் மத்திய அமைச்சர் முரளிதரன் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு வனம் மற்றும் சுற்றுச்சூழல் நலத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் மிட்னாபூர் பகுதியில் மத்திய வெளியுறவு மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வி.முரளிதரன் வாகனம் மீது திரிணமூல் கட்சியினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இது தொடர்பாக விடியோவை அவர் தமது சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்நிலையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியினரின் இத்தகைய செயலுக்கு அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது, மேற்கு வங்கத்தில் அமைச்சரின் வாகனத்திம் மீதே தாக்குதல் நடத்தப்படுகிறது எனில், அங்கு யாரால் பாதுகாப்பாக இருக்க முடியும்?.  மேற்கு வங்கத்தி வன்முறையை செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். குற்றவாளிக்கு தகுந்த தண்டனைப் பெற்றுத்தர சிறப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

SCROLL FOR NEXT