இந்தியா

‘நான் உயிருடன் தான் இருக்கிறேன்’: வன்முறையால் இறந்ததாக பதிவிட்ட பாஜகவிற்கு பத்திரிகையாளர் பதில்

6th May 2021 07:14 PM

ADVERTISEMENT

மேற்குவங்கத்தில் ஏற்பட்ட வன்முறையில் பலியானதாக பத்திரிகையாளரின் படத்தைப் பகிர்ந்த பாஜகவிற்கு அந்த பத்திரிகையாளர் பதிலளித்துள்ள சம்பவம் நடந்துள்ளது.

நடந்து முடிந்த மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் திரிணமூல் கட்சி பெருவாரியான இடங்களைப் பெற்று வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து பாஜகவினர் மீது திரிணமூல் கட்சியினர் தாக்குதல் நடத்தி வருவதாக பாஜக தலைவர்கள் புகார் தெரிவித்து வந்தனர். 

இந்நிலையில் திரிணமூல் கட்சியினர் நடத்திய தாக்குதலில் பலியானவர் என ஒருவரின் படத்தை பாஜக தனது சுட்டுரைப் பக்கத்தில் பகிர்ந்திருந்தது. 

பாஜக பகிர்ந்த படத்தில் இருந்தவர் அப்ரோ பானர்ஜி தனியார் செய்தி நிறுவனத்தில் பத்திரிகையாளராக பணியாற்றி வருபவர் என தெரிய வந்தது. இதுதொடர்பாக தனது சுட்டுரைப் பதிவில் பதிவிட்டுள்ள அவர்,  “நான் அப்ரோ பானர்ஜி, சிதல்குச்சியிலிருந்து 1,300 கி.மீ தூரத்தில் வசித்து வருகிறேன். ஆனால் பாஜக இணைய பிரிவினர் எனது பெயர் மானிக் மொய்த்ரா என்றும் நான் சிதல்குச்சியில் இறந்துவிட்டேன் எனவும் பரப்பி வருகின்றனர். தயவுசெய்து இந்த போலி செய்திகளை நம்ப வேண்டாம். நான் இன்னும் உயிருடன் தான் இருக்கிறேன்” என பதிவிட்டுள்ளார். 

ADVERTISEMENT

போலியாக செய்தி பகிர்ந்ததாக இணையவாசிகள் பாஜகவினரை விமர்சித்து வருகின்றனர்.

Tags : BJP West bengal
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT