இந்தியா

ஆசாராம் பாபுக்கு கரோனா பாதிப்பு: மருத்துவமனையில் அனுமதி

6th May 2021 12:17 PM

ADVERTISEMENT

 

பாலியல் வன்கொடுமை வழக்கில் சர்ச்சைக்குரிய சாமியார் ஆசாராம் பாபுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

80 வயதாகும் ஆசாராம் பாபுக்கு கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு சோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்குத் தொற்று இருப்பது உறுதியானது. சிறையில் அவருடன் சேர்த்து 12 கைதிகளுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 

இதையடுத்து அவர் ராஜஸ்தானின் ஜோத்பூர் நகரில் உள்ள எம்.டி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது ஆக்சிஜன் அளவு குறைவாக இருப்பதால் ஐசியு பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

ADVERTISEMENT

ஆசாரமை ஜோத்பூர் எய்ம்ஸுக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கற்பழிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுத் தண்டிக்கப்பட்ட பின்னர் ஆசாராம் தற்போது ஜோத்பூர் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Tags : Asaram Bapu Covid
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT