இந்தியா

கொலைக்குற்றம் எனக் கூறியது கடுமையானது: உச்ச நீதிமன்றம் கருத்து

6th May 2021 11:49 AM

ADVERTISEMENT

கரோனா பரவலால், தேர்தல் ஆணையம் மீது கொலைக்குற்றம் கூட சுமத்த முடியும் என சென்னை உயர் நீதிமன்றம் கூறியது கடுமையானது என்று உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.

கரோனா பரவலுக்கு காரணம் என்பதால் தேர்தல் ஆணையம் மீது கொலைக் குற்றம் கூட சுமத்தலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியிருந்தது.

நாட்டில் கரோனா பரவல் அதிகரித்ததற்கு தோ்தல் ஆணையம்தான் காரணம் என்று சென்னை உயா்நீதிமன்றம் அண்மையில் தெரிவித்த கடும் விமா்சனங்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் இந்திய தோ்தல் ஆணையம் சாா்பில் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

 

ADVERTISEMENT

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, கரோனா பரவலால், தேர்தல் ஆணையம் மீது கொலைக்குற்றம் கூட சுமத்த முடியும் என சென்னை உயர் நீதிமன்றம் கூறியது கடுமையானது என்று உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது. மேலும், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கடுமையான கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும் என்று அறிவுரை கூறிய உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையத்தின் மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டனர்.

மேலும், இந்த மனு மீதான விசாரணையில், ஊடகங்கள் தொடர்ச்சியாக சுதந்திரமாக செயல்படலாம். நீதிமன்ற விஷயங்களை செய்திகளாக வெளியிடலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநில பேரவைத் தோ்தலில் கரோனா தடுப்பு பணிகளை தோ்தல் ஆணைய அதிகாரிகள் சரிவர அமல்படுத்தாத காரணத்தால் அவா்கள் மீது கொலைக் குற்றச்சாட்டை பதிவு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கடும் விமா்சனங்களை சென்னை உயா்நீதிமன்றம் வழக்கு விசாரணையின்போது தெரிவித்திருந்தது.

இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் மேல்முறையீடு செய்திருந்தது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT