இந்தியா

எய்ம்ஸில் 65 மருத்துவர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை

6th May 2021 01:05 PM

ADVERTISEMENT

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வெளிநாட்டு மருத்துவர்கள் 65 பேருக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவமனையின் குடியுரிமை மருத்துவர்கள் சங்கம் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளது.

அதில் தில்லி, சண்டிகர், புதுச்சேரி ஜிப்மர் ஆகிய மருத்துவமனைகளில் நேபாளத்தை சேர்ந்த மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர்.

தில்லி ஜிப்மர் மருத்துவமனையில் 65 மருத்துவர்கள், பயிற்சி பணிபுரிந்து வருகின்றனர். ஆனால் அவர்களில் ஒருவர் கூட கடந்த ஆண்டு மார்ச் முதல் இதுவரை ஊதியம் பெறவில்லை என்று பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்தியாவில் பணிபுரியும் நேபாள மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று கடந்த 2018-ம் ஆண்டு நேபாள பிரதமருக்கு இந்திய பிரதமர் கடிதம் வாயிலாக அளித்த வாக்குறுதி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : AIIMS corona
ADVERTISEMENT
ADVERTISEMENT