இந்தியா

ஆப்கன் எல்லையில் 4 பாகிஸ்தான் வீரர்கள் சுட்டுக் கொலை

6th May 2021 03:39 PM

ADVERTISEMENT

 

பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லை அருகே நடந்த பயங்கரவாத தாக்குதலில் 4 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 6 பேர் காயமடைந்தனர். 

பாகிஸ்தானின் இன்டர்-சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ்(ஐ.எஸ்.பி.ஆர்) வெளியிட்டுள்ள அறிக்கையில், 

ஜாப் மாவட்டத்தில் துணை ராணுவப் படையினர் மாவட்ட எல்லையில் எல்லை வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்த தாக்குதல் நடந்ததாகத் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

தாக்குதலுக்குப் பின், காயமடைந்த வீரர்கள் தலைநகர் குவெட்டாவில் உள்ள ஒருங்கிணைந்த ராணுவ மருத்துவமனைக்கு  அனுப்பப்பட்டனர்.

ஐ.எஸ்.பி.ஆர் பயங்கரவாத நடவடிக்கைகள் மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளை நிறுத்த இந்த வேலி அமைக்கப்பட்டுள்ளது. 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT