இந்தியா

திகார் சிறையில் 319 கைதிகளுக்கு கரோனா: 5 பேர் பலி

6th May 2021 04:14 PM

ADVERTISEMENT

 

திகார் சிறையில் 319 சிறைக் கைதிகள் கரோனா தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர். 65 பேர் குணமடைந்த நிலையில், 5 பேர் உயிரிழந்தனர். 

இதுதொடர்பாக காவல்துறை தலைமை இயக்குனர் சந்தீப் கோயல் கூறியதாவது, 

திகார் சிறைச்சாலையில் இதுவரை 319 கைதிகளில் 249 பேர் சிகிச்சையிலும், 63 பேர் சிறையில் தனிமைப்படுத்துதலிலும், மேலும் 67 பேர் மத்தியச் சிறை மருத்துவமனையில்(திகார்), மண்டோலியில் உள்ள மத்தியச் சிறை மருத்துவமனையில் 37 பேரும், 14 பேர் குரு தேக் பகதூர் மருத்துவமனையிலும், 5 பேர் லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் மருத்துவமனையிலும், தீன் தயால் உபாத்யாய் மருத்துவமனையில் 4 பேரும், எய்ம்ஸ் மற்றும் மேக்ஸ் மருத்துவமனையில் தலா ஒருவரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் இதுபோன்ற 41 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

55 வயதிற்கு மேற்பட்ட கைதிகளுக்கு சிறை நிர்வாகம் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், சிறையில் உள்ள ஊழியர்களுக்கு இரண்டு அடுக்கு பாதுகாப்பு மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். 

மே 3ஆம் தேதி வரை மொத்தம் 135 சிறை ஊழியர்களுக்கு கரோனா பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 8 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். தற்போது 127 சிறை ஊழியர்கள் சிகிச்சையில் உள்ளனர் என்று அவர் கூறியுள்ளார். 
 

Tags : COVID-19
ADVERTISEMENT
ADVERTISEMENT