இந்தியா

இந்தியாவில் 2.06 கோடியை கடந்தது கரோனா பாதிப்பு: பலி 2.26 லட்சமாக உயர்வு

5th May 2021 10:13 AM

ADVERTISEMENT

 

புது தில்லி: நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2,06,65,148 -ஆக உயர்ந்துள்ளது. கடந்த 15 நாள்களில் மட்டும் 50 லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரங்களில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நாடு முழுவதும் ஒரேநாளில் 3,82,315 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்த எண்ணிக்கையையும் சோ்த்து இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 2,06,65,148 ஆக உயா்ந்துள்ளது. அதேசமயம் புதன்கிழமை காலை வரையிலும் நாடு முழுவதும் ஒரேநாளில் 3,780 போ் உயிரிழந்தனா். இதையும் சோ்த்து இதுவரை உயிரிழந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 2,26,188 ஆக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

கடந்த டிசம்பா் 19-ஆம் தேதியுடன் இந்தியாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1 கோடியைக் கடந்தது. அதன்பிறகு 107 நாள்கள் கழித்து ஏப். 5-இல் தான் கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை 1.25 கோடியாக அதிகரித்தது. ஆனால், அடுத்த 15 நாள்களில் 1.50 கோடியாகவும், கடந்த 15 நாள்களில் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை மேலும் 50 லட்சம் பேராகவும் அதிகரித்து விட்டனா்.

புதிதாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 34,87,229 ஆகவும், இதன் பாதிப்பு விகிதம் 16.87 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதேசமயம் தேசிய அளவில் கரோனா தொற்றின் மீட்பு விகிதம் 81.91 சதவீதமாக பதிவாகியுள்ளது.

இதுவரை கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 1,69,51,731-ஆக உள்ளது. அதே சமயம் உயிரிழப்பு விகிதம் 1.09 சதவீதமாக பதிவாகியுள்ளது என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தரவுகளின்படி, மே 4-ஆம் தேதி வரையிலும் 29,48,52,078 பேருக்கு கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும், செவ்வாய்கிழமை ஒரேநாளில் நாடு முழுவதும் 15,41,299 பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் இதுவரை 16,04,94,188 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

Tags : India coronavirus Total recoveries
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT