இந்தியா

தில்லியில் ஒரேநாளில் 338 பேர் கரேனாவுக்கு பலி: 19,953 பேர் பாதிப்பு 

5th May 2021 11:32 AM

ADVERTISEMENT

 

தேசிய தலைநகரான தில்லியில் ஒரேநாளில் 338 பேர் கரோனா தொற்றுக்கு உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, 

கடந்த 24 மணி நேரத்தில் தில்லியில் கரோனா தொற்றுக்கு 19,953 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்தம் 12,32,942 ஆக உயர்ந்துள்ளது. 

ADVERTISEMENT

மேலும், 338 பேர் பலியாகியுள்ளதையடுத்து, மொத்தம் 17,752 பேர் தொற்று காரணமாகப் பலியாகியுள்ளனர். அதேசமயம் 11.24 லட்சம் பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். 

நோய் பாதித்த 90,419 பேர் தற்போது சிகிச்சையில் இருந்துவருகின்றனர். 17,147 விரைவு சோதனை உள்பட நேற்று ஒருநாளில் 74,654 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. 

மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் 21,317 கரோனா படுக்கைகளில் 1,462 மட்டுமே தற்போது காலியாக உள்ளன. அதோடு, கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கை 44,052யிலிருந்து 46,174 ஆக உயர்ந்துள்ளது.

Tags : தில்லி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT