இந்தியா

ஆக்ஸிஜன் விநியோகத்திற்கு கட்டுப்பாட்டு அறை: ஹரியாணா முதல்வர்

5th May 2021 07:56 PM

ADVERTISEMENT

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நேரத்தில் ஆக்ஸிஜன் விநியோகிக்கும் வகையில் சண்டிகரில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், இதுவரை ஒடிசாவிற்காக 70 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் அனுப்பப்பட்டுள்ளது. ஆக்ஸிஜன் விநியோகம் செய்வதற்காக 20 டேங்கர் லாரிகளும் அரசு சார்பில் வாங்கப்பட்டுள்ளது. 

எனினும் உரிய இடங்களுக்கு ஆக்ஸிஜன் விநியோகம் செய்வதற்கு மேலும் டேங்கர் லாரிகள் தேவைப்படுகின்றன என்று கூறினார். 

கரோனா தொடர்ந்து அதிகரித்து வந்ததால், ஒடிசாவில் இன்று (மே 5) முதல் 14 நாள்கள் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT

Tags : Haryana coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT