இந்தியா

ஆக்ஸிஜன் பற்றாக்குறை: ரூர்கி மருத்துவமனையில் 5 பேர் பலி

5th May 2021 11:13 AM

ADVERTISEMENT

ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் ரூர்கி மருத்துவமனையில் 5 கரோனா நோயாளிகள் உயிரிழந்ததாக ஹரித்வார் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

நாடு முழுவதும் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. படுக்கைகள், ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு பற்றாக்குறை நிலவி வருகிறது. 

இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்ட நிர்வாகத்துக்கு உட்பட்ட ரூர்கி மருத்துவமனையில் இன்று ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 5 கரோனா நோயாளிகள் உயிரிழந்துளளனர். இதனை மாவட்ட நிர்வாகமும் உறுதி செய்துள்ளது. 

மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டு ஒரு குழுவை அமைத்துள்ளது.

ADVERTISEMENT

திங்கள் இரவு இந்த மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டது. பின்னர் அவசரமாக 20 சிலிண்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் இன்று அதிகாலை மீண்டும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. 

Tags : oxygen
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT