இந்தியா

இந்தியாவில் இதுவரை 15.89 கோடி தடுப்பூசிகள் செலுத்தி சாதனை

4th May 2021 12:41 PM

ADVERTISEMENT

 

இந்தியாவில் இதுவரை 15.89 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், 

கரோனா தொற்றுக்கு எதிரான, உலகின் மாபெரும் தடுப்பூசி போடும் திட்டத்தில் இந்தியாவில் இன்று காலை 7 மணி நிலவரப்படி ஒட்டுமொத்தமாக, இதுவரை 23,35,822 முகாம்களில் இதுவரை 15,89,32,921 தடுப்பூசிகள்  செலுத்தப்பட்டன. 

ADVERTISEMENT

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 17,08,390 லட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. 

12 மாநிலத்தில் 18 முதல் 44 வயதுக்குள்பட்டவர்களுக்கு இதுவரை 4,06,339 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் பதிவான புதிய பாதிப்புகளில், தமிழ்நாடு, மகாராஷ்டிரம், கர்நாடகம், கேரளம், உத்தரப் பிரதேசம், தில்லி, மேற்கு வங்கம், ஆந்திரப் பிரதேசம், ராஜஸ்தான், பிகார் ஆகிய பத்து மாநிலங்களில் மட்டும் 66.94 சதவீத தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Tags : vaccine
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT