இந்தியா

ஊரடங்கை மீறியவர்களுக்குத் தண்டனை அளித்த காவல் துறை

4th May 2021 11:42 AM

ADVERTISEMENT

ஹரியாணாவில் முழு முடக்கத்தை மீறி வெளியில் அவசியமின்றி நடமாடியவர்களுக்கு காவல்துறையினர் தோப்புக்கரணம் போடவைத்து அனுப்பிவைத்தனர்.

ஹரியாணாவில் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் முழு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (மே 3) முதல் முழு முடக்கம் அமலுக்கு வந்தது.

இந்நிலையில் பொதுமுடக்கத்தை மீறி பொதுமக்கள் பலர் அவசியமின்றி வெளியில் நடமாடினர். அவர்களை எச்சரித்த காவல் துறையினர் அவர்களை சாலையில் நிற்கவைத்து தோப்புக்கரணம் போடவைத்து அறிவுறுத்தி அனுப்பினர். 

Tags : Haryana coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT